தென்காசியில் கபடி வீரர் கோபால்சாமி மீது வீடு புகுந்து தாக்குதல் .!
தென்காசி

தென்காசியில் கபடி வீரர் கோபால்சாமி மீது வீடு புகுந்து தாக்குதல்
தென்காசி செப் 22
தென்காசியில் கபடி விளையாட்டில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக நட்சத்திர விளையாட்டு வீரரை வீடு புகுந்து தாக்கிய மர்ம கும்பல் - சிசிடிவி காட்சிகள் வெளியாகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி பகுதியை சேர்ந்த வை.கோபால்சாமி என்பவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கபடி வீரரான இவர் திப்பணம்பட்டியில் சாரல் கபடி அணியின் நட்சத்திர விளையாட்டு வீரர் எனவும் கூறப் படுகிறது. கபடி விளையாட்டில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மாற்று அணியை சேர்ந்த நான்கு நபர்கள் நேற்று மாலை வை.கோபால்
சாமியை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
வீட்டில் இவரும், மனைவியும் மட்டும் தனியாக இருந்த நிலையில் வீடு புகுந்த கும்பல் சரமாரியாக தாக்கியதில் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த இருவரும் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்
பட்டுள்ளனர். இந்த நிலையில் இது குறித்த நான்கு நபர்கள் வீடு புகுந்து தாக்கக்கூடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்
AGM கணேசன்