தென்காசிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அக் 29 ல் வருகை .!
தென்காசி
தென்காசிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அக் 29 ல் வருகை
கனமழையால் முதல்வர் மு க ஸ்டாலின் தென்காசி வருகை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இம்மாதம் 29ம் தேதி வருகை தருவது உறுதியாகி உள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு இம்மாதம் 29ம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் வருகை உறுதி செய்யப் பட்டுள்ளது. அன்று அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
29ம் தேதி காலை சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையம் வருகை தருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தென்காசி வருகிறார். வழியில் ஆலங்குளத்தில் திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
மதியம் குற்றாலம் சுற்றுலா மாளிகையில் தங்கி விட்டு மாலை 4 மணிக்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நிகழ்ச்சி முடிந்த பிறகு சாலை மார்க்கமாக ராஜபாளையம் வழியாக மதுரை சென்று இரவில் அங்கு தங்குகிறார்.
மறுநாள் 30 ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
தென்காசி மாவட்டம் வருகை தரும் முதல்வருக்கு திமுக சார்பில் அனைவரும் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
AGM கணேசன்
