புளியங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.!
தென்காசி
புளியங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தென்காசி ஆகஸ்ட் 3
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் நான்கு மாதகால செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் புளியங்குடி அனைத்து கிளைகள் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி மாவட்ட தலைவர் அப்துஸ் ஸலாம் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹஜா்மைதீன், பீர் மைதீன், முஹமது அலி பிலால், அப்துல் பாசித், செய்யத்அலி, மாணவரணி செயலர் ரபீக் ராஜா மற்றும் புளியங்குடி அனைத்து கிளை நிர்வாகிகள் முன்னிலையில் பேரணி நடைபெற்றது.
இப் பேரணியை தென்காசி மாவட்ட செயலாளர் ஜலாலுதீன் துவக்கி வைத்தார் புளியங்குடி பஸ் நிலையம் பின்புறம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து தொடங்கி மெயின் ரோடு வழியாக பள்ளிவாசல் ஸ்டாப்பில் நிறைவடைந்தது.


நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட பேரணியின் முடிவில் நிறைவுரையாற்றிய மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே சமிபகாலமாக அதிகரித்துள்ள போதைப் பொருள் பழக்கத்தினை முழுவதும் இல்லாதாக்கும் வகையில் தவ்ஹீத் ஜமாஅத் மாநில அளவில் போதை விழிப்புணர்வு மற்றும் தேச பிரச்சாரத்தினை செயல் திட்டமாக முன்னெடுத்து வருவதை மேற்கோள் காட்டினார்.
மேலும் வெறுப்பற்ற சமத்துவ சமுதாயம் உருவாக தடையாக இருக்கும் போதை பொருள் உபயோகத்தினை ஒழிப்பதில் அனைத்து சமுகத்தினரும் இணைந்து பாகுபாடில்லாமல் பாடுபடவேண்டுமென வலியுறுத்தினார் .
சிறுவர்களிடையே அதிகரித்துள்ள கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடவும் அவர்களை நேர்வழிப்படுத்தவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் அனைத்து வகையான பிரச்சாரங்களுக்கு பொதுமக்களிடையே ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும் கோரினார்
முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் காஜா நன்றி கூறினார்
பேரணிக்கான ஏற்பாட்டினை புளியங்குடி அனைத்து கிளை நிர்வாகிகள் அப்துல் நாசர் , செய்யது இப்ராஹிம், முஹம்மது காசிம் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தொண்டரணி பொறுப்பாளர் ஷேக்தாவூத் தலைமையிலான தொண்டரணியினர் செய்திருந்தனர் .
செய்தியாளர்
AGM கணேசன்
