கண்ணகி வேஷம்! பாஜக போராட்டத்திற்கு வந்து சிக்கிக்கொண்ட நாட்டுப்புறக் கலைஞர்கள்! கண்ணீர் விட்டு கதறல்

மதுரை

கண்ணகி வேஷம்! பாஜக போராட்டத்திற்கு வந்து சிக்கிக்கொண்ட நாட்டுப்புறக் கலைஞர்கள்! கண்ணீர் விட்டு கதறல்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதில் குற்றவாளியாக கருதப்படும் நபரை சில மணி நேரங்களில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும், சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக போராட்டத்தை அறிவித்தது. இன்று மதுரையில் பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டத்துடன் பேரணி தொடங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

காலை, சிம்மக்கல்லில் உள்ள செல்லத்தம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கண்ணகி சிலை முன்பு திரண்ட பாஜகவினர் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதில் கண்ணகி வேடமிட்டவர் கைகளில் சிலம்பு ஏந்தி வீரமுழக்கமிட்டார். உடன் இருந்தவர்கள் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தையடுத்து பேரணி செல்ல பாஜகவினர் முயன்றிருக்கின்றனர். அவர்களை அப்படியே தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.

அனுமதி மீறி நடக்கும் போராட்டங்களில் போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கை இதுதான். அதாவது, போராடுபவர்களை கைது செய்து தனி மண்டபத்தில் அடைத்து வைப்பார்கள். அவர்களுக்காக குடிநீர், உணவு உள்ளிட்டவை போலீசாரால் விநியோகிக்கப்படும். அதேபோல, போராட்டத்தில் பங்கேற்றவர்களின் பெயர், முகவரி என அனைத்தும் சேகரிக்கப்படும். பின்னர் மாலை 6 மணிக்கோ, 7 மணிக்கோ மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படும். எனவே போராட்டத்திற்கு வருபவர்கள் இதற்கான தயாரிப்புடன்தான் வருவார்கள்.

மதுரையில் பாஜக மகளிர் அணியினரையும் போலீசார் இப்படித்தான் கைது செய்தார்கள். ஆனால் இந்த கைது நடவடிக்கைக்கு கண்ணகி வேடம் போட்ட பெண் பயந்து கண்ணீர் விட்டு கதறியிருக்கிறார். அதாவது போராட்டத்திற்கு வந்து கண்ணகி வேடம், தீச்சட்டி ஏந்தும் வேடங்கள் மட்டும் போட்டுக்கொடுத்தால் போதும் என்று வாடகைக்கு பேசி, நெல்லையிலிருந்த நாட்டுப்புற கலைஞர்களை பாஜகவினர் அழைத்து வந்திருக்கின்றார்களாம். போராட்டம் முடிந்ததும், கலைஞர்கள் புறப்பட தயாராகியுள்ளனர்.

அப்போதுதான் அவர்களை அல்லேக்காக மடக்கி பிடித்து போலீஸ் வாகனத்தில் காவலர்கள் ஏற்றியுள்ளனர். இதில் கண்ணகி வேடமிட்டவர் தன்னை விட்டுவிடுமாறு கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இது தொடர்பான விடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது. கண்ணகி வேடம் போட்டு வீர முழக்கமிட்டவர்கள் கைதுக்கு பயப்படலாமா? என பலரும் கேள்வி