முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் உடலிற்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
புது தில்லி

புதுதில்லியில் உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
உடல்நலக் குறைவால் காலமான முன்னால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள் என பலர் உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புது டில்லிக்கு நேரில் சென்று முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதலையும் தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உடன் கழக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, கனிமொழி கருணாநிதி ஆகியோர் உடனிருந்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறினர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )