ஆண் நண்பர்களுடன் வந்த பெண்களை பாலியல் செய்த இளைஞர்களை கைது செய்த போலீசார்.!
கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் தனது 3 ஆண் நண்பர்களுடன் சுற்றி பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பெட்ரோலுக்காக பணம் கேட்டு அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ரூ.20 கொடுத்தபோது ரூ. 100 ரூபாய் வேண்டுமென வாதாடினார்கள். இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதால் அந்தப் பெண்களுடன் வந்த 3 நண்பர்கள் அருகிலிருந்த கால்வாயில் விழுந்தனர்.
அதில் ஒடிசாவை சேர்ந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் பணம் கேட்டு தொந்தரவு செய்த வாலிபர்கள் அந்த 2 பெண்களையும் துன்புறுத்தினர். அதோடு அவர்களை பாலியல் வன்கொடுமையும் செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீயணைப்புத்துறை கண்காணிப்பு பிரிவுடன் இணைந்து உயிரிழந்த இளைஞனின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அந்த 2 பெண்களுக்கும் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த 3 குற்றவாளிகள் மீது பாரதிய ந்யாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் பல பிரிவுகளில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒடிசா சுற்றுலா பயணியின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் கொலை தொடர்பாக கூடுதல் பிரிவுகள் FIR இல் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த 3 குற்றவாளிகளும் உள்ளுர் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை கைது செய்வதற்காக காவல்துறையினர் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளான அந்த 2 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சட்டரீதியாக நீதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.