சீமான் பொது வெளியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் வருண் குமார்.!

தமிழகம்

சீமான் பொது வெளியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் வருண் குமார்.!

என்னைப் பற்றி அவதூறாக பேசிய சீமான், என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தார், அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை.

பொதுவெளியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிவிட்டேன்' என்று திருச்சி எஸ்.பி ஆக இருந்து, டிஐஜி.,ஆக பதவி உயர்வு பெற்றுள்ள வருண் குமார் ஐபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.

திருச்சி எஸ்.பி வருண் குமாரை டிஐஜி., ஆக பதவி உயர்வு செய்து, தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், அவரது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலை தளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி எஸ் பி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 ல் அவரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சீமான் மீதான வழக்கில் ஆஜர்

அந்த வழக்கிற்காக நீதிபதி உத்தரவின் அடிப்படையில் எஸ் பி வருண்குமார் இன்று குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி(பொறுப்பு) பாலாஜி முன்பு நேரில் ஆஜராகினார். அவரிடம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானும், தன்னுடைய கடமையை செய்ததற்காக, தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகவும் ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் பொதுவெளியிலும் என் குறித்து பேசினார், குறிப்பாக ஜாதி உள்ளிட்டவை குறித்து பகிரங்கமாக பொதுவெளியில் சீமான் பேசினார். மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியுள்ளார் என்பது தொடர்பான கருத்துக்களை வரண்குமார் தெரிவித்தார். அதனை நீதிபதி பாலாஜி முழுமையாக பதிவு செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நீதிமன்ற நடைமுறைகள் முடிவடைந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி எஸ் பி வருண்குமார், பேசியதாவது:

''இந்த வழக்கை என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நான் தொடரவில்லை. மாறாக, தனிப்பட்ட முறையில் தான் வழக்கு தொடர்ந்து உள்ளேன். இது குறித்து என்னுடைய உயர் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக நான் தெரிவித்துவிட்டேன் என கூறியுள்ளார் வருண் குமார் இ.கா.ப.