மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து ஐந்து நபர்கள் தீக்குளிக்க முயற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகமே பரபரப்பு.!
திண்டுக்கல்

தொடர் மனுக்கள் மீது மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து ஐந்து நபர்கள் தீக்குளிக்க முயற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகமே பரபரப்பு.!
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் பத்து தாலுகாக்கள் உள்ளன. சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட முழுவதும் பல்வேறு தங்களது சொந்த பிரச்சினைகளுக்காக காவல் நிலையம் வட்டாட்சியர் அலுவலகம் ஊராட்சி அலுவலகம் என அரசு அலுவலகங்களில் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளில் புகார் அளித்தாலும் புகாரின் மீது அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் தொடர்ந்து காலை 9 மணி முதல் 11 மணி மணி வரை 5க்கும் மேற்பட்டோர் தங்களது பல்வேறு பிரச்சனைகளை மாவட்ட அதிகாரிகள் அரசு அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அலைக்கழிப்பு செய்து வருவதாக கூறி பெட்ரோல். தின்னர்.டீசல் உள்ளிட்ட எளிதில் மற்ற கூடியவைகளை மேலே ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதில் மனு கொடுக்க வந்தவர்கள் குழந்தைகளுடனும் வயதானவர்கள் மற்றும் பெண்களுடனும் வந்து பெட்ரோலை மேலே ஊற்றி தீப்பற்ற வைக்க முயற்சி செய்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் கூறும் பொழுது ஒரே நாளில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தால் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் எவ்வளவு மெத்தன போக்காக செயல்படுகிறார்கள் அதிகாரிகள் வேலை செய்கிறார்களா என்று கூறி சென்றது பொதுமக்களிலேயே மன வேதனையை இப்பகுதியில் பதிவு செய்து சென்றது போல் இருந்தது
அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதுமான காவலர்கள் இல்லாததும் மனு வழங்க வருபவர்களை காவல்துறையினர் சோதனை செய்யாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே அனுப்பி வைத்ததும் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைக்க முயற்சி செய்தார்கள் காரணம் என்றும் கூறப்படுகிறது..
அழகர் சாமி