வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்த நபர் கைது.!

சென்னை

வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்த நபர் கைது.!

தாம்பரத்தில் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி 25 லட்சம் வரை மோசடி செய்த நபர் கைது. 

சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் ஹரிஹரன்(44), இவர் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் அலுவலகத்தை கடந்த 2023ம் ஆண்டு முதல் வைத்து நடத்தி வந்துள்ளார். 

இந்நிலையில் பல பேரிடம் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 லட்சம், 5 லட்சம் என பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் வேலையும் வாங்கி தராமல், போனையும் எடுக்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து, கடந்த டிசம்பர் மாதம் பாதிக்கப்பட்ட மணிகண்டன்(36), நல்லசிவம், தினேஷ் உள்ளிட்ட 7 பேர் தாம்பரம் காவல் நிலையத்தில் 25 லட்சம் வரை ஏமாற்றியதாக புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தாம்பரம் போலீசார் தலைமறைவாக இருந்த ஹரிஹரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நிர்மலா என்பவரை தேடி வருகின்றனர்.

செய்தியாளர்

S S K