உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலமாக முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்.!
வாலாஜாப்பேட்டை

வாலாஜாபேட்டை அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலமாக முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்
தமிழகம் முழுவதும் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலமாக மக்களின் பிரச்சினைகளை மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக உடனுக்குடன் நேரடியாக சென்று கள் ஆய்வு மேற்கொள்ளும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையிலான துறைசார்ந்த அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட பகுதியில் 24 மணி நேரம் தங்கி அங்கு பொதுமக்களுக்கு தேவையான பிரச்சினைகளை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று வாலாஜாபேட்டை பகுதியில் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலமாக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார் அப்போது நகராட்சிக்குட்பட்ட நகராட்சி அரசு இருபாலர் நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டதோடு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியை தரம் ஆய்வு செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து மேனி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பூங்கா அதேபோல் குப்பை தரம் பிரிக்கும் இடம் மற்றும் குப்பையை அரைக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து அதன் நிறை குறைகளை குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வினை மேற்கொண்டார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியருடன் அனைத்து துறை அரசு அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அருள் அரசன்