ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .!
திருப்பத்தூர்

ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய் கிழமை இன்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் திருமால் தலைமையில் நடைபெற்றது. இதில் குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட இணை செயலாளர் சுதன் குமார், கோட்ட பொறுப்பாளர் பத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வருவாய் துறை அலுவலர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் அதிக பணி நெருக்கடிகளை கலைத்திட வேண்டும், தமிழக அரசு தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
ந.வெங்கடேசன்