1,250 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோவில்களுக்கு வரைவோலை வழங்கிய முதலமைச்சர். !
ஆண்மிகம்

1,250 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோவில்களுக்கு வரைவோலை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். !
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 2024 – 2025 ஆம் நிதியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக் கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள உயர்த்தப்பட்ட நிதியுதவி தலா ரூ. 2.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ. 62.50 கோடி வழங்கிடும் அடையாளமாக 12 திருக்கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் திருப்பணிக்கான வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.