தென்காசியில் பாரத் பிட்னஸ் ஜிம் உடற்பயிற்சி கழக 47வது ஆண்டு விழா, மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய ஜிம் திறப்பு விழா .!
தென்காசி

தென்காசியில் பாரத் பிட்னஸ் ஜிம் உடற்பயிற்சி கழக 47வது ஆண்டு விழா, மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய ஜிம் திறப்பு விழா
மாவட்ட ஆட்சியர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
தென்காசி செப் 22
தென்காசி பாரத் பிட்னஸ் ஜிம் மற்றும் உடற்பயிற்சி கழகத்தின் 47வது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய உடற்பயிற்சி
உபகரணங்களுடன் கூடிய ஜிம் திறப்பு விழா நடை பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கத்தின் தலைவர் ஏசியன் பவர் லிப்டர் பாரத் உடற்பயிற்சி கழகம் உரிமையாளர் குத்தாலிங்கம், தென்காசி அமச்சூர் ஆணழகன் சங்க தலைவர் பூங்குன்றன் வேலாயுதம்,தேசிய விளையாட்டு வீரர் மாஸ்டர் கணேசன், தேசிய விளையாட்டு வீரர் மாஸ்டர் வீரகுமார்,
தென்காசி மாவட்ட அமைச்சூர்
ஆணழகன் சங்கத்தின் துணை தலைவர்
மாரியப்பன் என்ற கருணாநிதி, பெண்களுக்கான ஜிம் கோச் ராமலக்ஷ்மி மாரியப்பன்,
மாஸ்டர் ராஜு, ஜிம் ஆனந்த், சூரிய பிரகாஷ் மற்றும் சூரிய நாராயணன் முத்துவேல் மற்றும் உடற்பயிற்சி கழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்