தமிழ்நாடு அரசியலில் திரும்பி பார்க்க வைக்கும் சில முக்கிய முடிவுகள், அமைச்சர்களுக்கு அலர்ட் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். !
சட்டப்பேரவை

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஒன்று வரும் 14ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இச்சந்திப்பு கூடுகிறது.
இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசியலை திரும்பி பார்க்க வைக்கும் சம்பவம் ஒன்று நடக்கலாம் என்று கூறப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் காலை பதினோரு மணிக்குச் சந்திப்பு தொடங்கும். முக்கிய சட்ட ஆலோசனைகள் விவாதிக்கப்படுவது இதன் நோக்கமாகும்.
மாநிலத்தின் கொள்கை முடிவுகளில் இக்கூட்டம் முக்கியப் பங்காற்றும். மக்கள் நலன் சார்ந்த விவகாரங்கள் இங்கு விவாதிக்கப்படும். நிர்வாகத் தீர்மானங்களுக்கான தளமாக இது அமையும். அரசின் செயல்பாடுகளுக்கு இக்கூட்டம் வழிகாட்டும்.
1. சுதந்திர தினத்தில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள் அன்று இறுதி செய்யப்படும்.
2. சுதந்திர தினத்தில் முக்கியமான சில அறிவிப்புகள் அதிலும் அரசு ஊழியர்கள் , பெண்களை கவரும் அறிவிப்புகள் வரலாம் என்கிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
3. அதேபோல் நெல்லையில் நிகழ்ந்த ஆணவக் கொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலியான கவின், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள ஒரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினியைக் கவின் காதலித்து வந்தார். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இவர்களின் காதல், பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நீடித்தது.
ஒரு கட்டத்தில், கவினைச் சந்திக்க அழைத்த சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றார். இந்தக் கொடூர சம்பவத்திற்குப் பிறகு, சுர்ஜித் நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி, தந்தை சரவணன் ஆகியோரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்தது. உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வந்த அவர்கள் இருவரும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணன் ஆகியோர் கைதும் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த விவகாரம் உச்சத்தில் உள்ள நிலையில் ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டம் கொண்டு வருவதாக தொடர்பாக இதில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
4. பல ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, மாநில அரசுக்கு பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இந்த நீண்டகால கோரிக்கைக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
சமீபத்தில், அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகளை மறுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பழைய ஓய்வூதியம் எனப்படும் ஓபிஎஸ் திட்டத்தில் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். மேலும் அகவிலைப்படியும் (டிஏ) அவ்வப்போது மாற்றியமைக்கப்படும். இது ஓய்வுக்குப் பிறகு அதிக நிதி நிலைத்தன்மையையும், பாதுகாப்பையும் வழங்கும்.
ஜனவரி 1, 2004 முதல் புதிய ஊழியர்களுக்கு ஓபிஎஸ் திட்டம் நிறுத்தப்பட்டு, சந்தை அடிப்படையிலான பங்களிப்பு திட்டமான தேசிய ஓய்வூதிய முறை (என்பிஎஸ்) அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது அந்த பணம் முதலீடு செய்யப்படும் மார்க்கெட் அடிப்படையில் மட்டுமே ஓய்வூதியம் கொடுக்கப்படும். சமீபத்தில் சில மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஓபிஎஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும், பெரும்பாலான மாநிலங்களில் 2004-க்கு முன்பு அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள்.
சமீபத்தில் வெளியான, அக்டோபர் 1 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் வசதி செய்து தரப்படும் என்ற அறிவிப்பு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான முக்கிய கோரிக்கையுடன் ஒப்பிடும்போது சிறிய சலுகையாகவே பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், ஸ்டாலின் அரசு விரைவில் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றியும் கூட முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.