துணை  சுகாதார நிலையத்திற்கு புதிய  கட்டிடம் கட்டுதல் பணிகளுக்கு பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி

துணை  சுகாதார நிலையத்திற்கு புதிய  கட்டிடம் கட்டுதல் பணிகளுக்கு பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, வரட்டனப்பள்ளி ஊராட்சியில்  தேசிய சுகாதார இயக்கம் 2025-2026  ஆம் ஆண்டு 15-வது நிதி குழு மானியம் திட்டத்தில்  கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் துணை  சுகாதார நிலையத்திற்கு புதிய  கட்டிடம் கட்டுதல் பணிகளுக்கு கிருஷ்ணகிரி  கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்., MLA பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், மாநில,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு உறுப்பினர்கள், பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், கழகதொண்டர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ