கல்லூரி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.81,000.. புதின் அதிரடி அறிவிப்பு!

ரஷ்யா

கல்லூரி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.81,000.. புதின் அதிரடி அறிவிப்பு!

ஒரு காலத்தில் உலக நாடுகளில் அதிக மக்கள் தொகை எப்படி ஒரு பெரும் பிரச்சனையாக கருதப்பட்டதோ அதேபோல, தற்போது குறைவான மக்கள் தொகை ஒரு முக்கிய பிரச்சனையாக கருதப்படுகிறது.

உலக அளவின் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் மக்கள் தொகை சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் அந்த நாடுகள் பல்வேறு அறிவிப்புகள் மற்றும் மார்றங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ரஷ்யாவிலும் மக்கள் தொகை குறைவாக உள்ளதால் அங்கு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, குழந்தை பெறும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.81,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்

உலக அளவில் ரஷ்யா மிகப்பெரிய பரப்பளவை கொண்ட நாடாக விளங்கினாலும், அது கடும் மக்கள் தொகை சரிவை சந்தித்து வருகிறது. அதாவது ரஷ்யாவில் தற்போது இறப்பு விகிதத்தை விடவும் பிறப்பு விதிகம் மிகவும் குறைவாக உள்ளது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் இதே சிக்கல் தான் நிலவி வருகிறது. இதற்கு பொருளாதாரம், இளைஞர்களின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. அந்த வகையில், ரஷ்யாவின் பிறப்பு விகிதம் குறைவுக்கு, பொதுமக்கள் வேறு பகுதிகளுக்கு குடியேறுவது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதுமட்டுமன்றி, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் கடும் போர், ரஷ்யாவின் மக்கள் தொகையை மேலும் மோசம் அடைய செய்யும் விதமாக அமைந்துள்ளது. இதன் விலைவாக ரஷ்யாவில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பிறப்பு விகித சரிவு ஏற்படுள்ளது. அதாவது, 2024-ல் ரஷ்யாவில் வெறும் 5,99,600 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.

இவ்வாறு ரஷ்யாவின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தால் அந்த நாடு விரைவில் அழிந்துவிடும் என கூறப்படுகிறது. எனவே, மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில் கல்லூரி மாணவிகளிக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது. அதாவது, பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவிகள் குழந்தை பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு சுமார் 1,00,000 ரூபிள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.81,000 ஆகும். இந்த ஊக்கத்தொகையை பெற மாணவிகள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கரேலியாவில் வசிக்க வேண்டும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.