ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை.!
இந்தியா

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பழைய வருமான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய வருமான வரி பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதை வைத்து நீங்கள் எந்த வருமான வரி பிரிவை தேர்வு செய்வது சரியாக இருக்கும் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு முதலீடுகள் அதிகம் உள்ள பட்சத்தில்.. வருமானமும் மாதத்திற்கு 1 லட்சத்திற்கு மேல் இருந்தால் புதிய வருமான வரிக்கு பதிலாக பழைய முறையை பின்பற்றலாம்.
இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
புதிய முறை:
அதுவே உங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகள் இல்லை. அதேபோல் வருமானமும் வருடம் 12 லட்சம் என்றால் புதிய முறையே பெஸ்ட்.
இந்த சலுகை முதலில் எல்லோருக்கும் கிடையாது. புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது.
0-4 லட்சம் ரூபாய் வரி இல்லை
4-8 லட்சம் ரூபாய் 5 சதவீதம்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம்
12-16 லட்சம் ரூபாய் 15 சதவீதம்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம்
20-24 லட்சம் ரூபா 25 சதவீதம்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம்
எடுத்துக்காட்டு:
புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. நீங்கள் இந்த முறையை தேர்வு செய்துள்ளீர்கள். இப்போது உங்கள் மாத வருமானம் ரூ. 1 லட்சம் என்றால்.. வருட வருமானம் 12 லட்சம்.
புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.
அதுவே நீங்கள் 12 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது பின்வரும் ஸ்லாப் நடைமுறை ஆகும்.
0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 லட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 லட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்
புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும்.