ஜெயிலில் படுக்கை,தலையனை,ரூம் வேண்டுமென கேட்ட நடிகர் தர்ஷன், காட்டமான நீதிபதி இட்ட உத்தரவு. !
பெங்களூர்
ஜெயிலில் தனக்கு படுக்கை, தலையணை, ஆடைகள், சிறையில் வேறு அறைக்கு மாற்ற வேண்டும் என்றெல்லாம் கோரி, கன்னட நடிகர் தர்ஷன் சார்பில் பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
தன்னுடைய தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை, சோஷியல் மீடியாவில் சீண்டிய விவகாரத்தில் ரேணுகாசுவாமி என்பவரை கடத்தி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளவர் கன்னட நடிகர் தர்ஷன்.
கடந்த வருடம் தர்ஷன் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.. அவரிடம் நீதிமன்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.
நடிகர் தர்ஷன்
இப்படித்தான், கடந்த மாதம் சிறையில் இருந்தவாறு காணொளி வாயிலாக 64 ஆவது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தர்ஷன் ஆஜரானார்.
அப்போது நீதிபதியிடம் தர்ஷன், பல நாட்களாகவே சூரியவெளிச்சத்தை பார்க்கவில்லை.. என்னுடைய கைகளில் பூஞ்சையே வந்துவிட்டது. என்னுடைய உடையெல்லாம் துர்நாற்றம் வீசுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் என்னால் உயிர் வாழவே முடியாது, அதனால் தயவு செய்து எனக்கு விஷத்தையாவது தந்துவிடுங்கள் ஐயா என்று நீதிபதியிடம் முறையிட்டார்.
வாக்கிங் போக அனுமதி
உடனே இதைக்கேட்ட நீதிபதி, அப்படியெல்லாம் செய்ய முடியாது, அது சாத்தியமில்லை என்றார். அதற்கு நடிகர் தர்ஷன், சிறை விதிகளின்படி, வாக்கிங் போகவும், அடைக்கப்பட்டுள்ள ரூமுக்கு வெளியே நடமாடவும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இப்படி ஒவ்வொரு முறை விசாரணையின்போதும் நீதிபதியிடம் தர்ஷன் ஏதாவது முறையிட்டு கொண்டும், கோரிக்கை விடுத்துக்கொண்டும் உள்ளார்..
அந்தவகையில், ஜெயிலில் தனக்கு படுக்கை, தலையணை, ஆடைகள், சிறையில் வேறு அறைக்கு மாற்ற வேண்டும் என்றெல்லாம் கோரி, கன்னட நடிகர் தர்ஷன் சார்பில் பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
படுக்கை வசதிகள்
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், சிறை விதிமுறைகளின் படியும், கோர்ட்டு உத்தரவின் படியும் தர்ஷனுக்கு என்னவெல்லாம் சலுகைகள் வழங்க வேண்டுமோ, அதனை தந்துள்ளோம்.. அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து கோர்ட்டில் அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. சிறைத்துறையின் விதிமுறைகளை மீறி வேறு எந்த சலுகைகளும் வழங்க சாத்தியமில்லை" என்று வாதிட்டார்
உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ஷன் தரப்பில் ஆஜரான வக்கீல், "சிறை நிர்வாகம் சொல்வது போல் தர்ஷனுக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை. சிறைக்குள் வாக்கிங் போவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நேரத்தில்தான் சிறைக்குள் தனிமைப்படுத்தும் அறையில் கைதிகள் அடைக்கப்பட்டனர். இப்போது தர்ஷனும் அங்கேயே அடைக்கப்பட்டிருக்கிறார் எனவே கைதிகள் போல் தனிமைப்படுத்தும் அறையில் இருந்து தர்ஷனை மாற்ற வேண்டும்.
படுக்கை, தலையணை
கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும், அதனை சிறை நிர்வாகம் மீறியுள்ளது. எனவே தர்ஷனுக்கு படுக்கை, தலையணைகள் வழங்க உத்தரவிட வேண்டும்,
இதையடுத்து நீதிமன்றமும், சிறைக்கு சென்று நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக சட்ட சேவை ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
எனவே, சட்ட சேவை ஆணைய நீதிபதி வரதராஜூம், ஜெயிலுக்கு சென்று ஆய்வு நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.. பிறகு அந்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து, அக்டோபர் 29ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.
நீதிபதி அதிரடி உத்தரவு
அதன்படியே நேற்றைய தினம் தீர்ப்பு தரப்பட்டது.. அதில், சிறையில் தர்ஷனுக்கு தலையணை, படுக்கை வழங்க சிறை விதிமுறைகளின்படி அவகாசம் இல்லாததால்,
அதனை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தர்ஷனுக்கு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ஆடைகள் வழங்கவும் சிறை நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இப்போதுள்ள சிறை அறையில் இருந்து, இன்னொரு அறைக்கு மாற்றுவது குறித்து சிறை நிர்வாகமே முடிவு செய்யலாம் என்றும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
