காதலை ஏற்காததால் ஆசிரியரை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து தாக்கிய இளைஞன். !
கர்நாடகா
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் கொப்பா தாலுகாவில் ஜெயபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 25 வயது இளம்பெண். இவர் அரசு பள்ளியில் தற்காலிகமாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த ஆசிரியை வசிக்கும் பகுதியின் அருகே உள்ள கிராமத்தின் பெயர் பாலூர். இங்கு 24 வயது நிரம்பிய பாவித் என்ற இளைஞர் உள்ளார். பாவித்துக்கு, ஆசிரியை மீது காதல் வந்துள்ளது.
பள்ளி முடிந்து ஆசிரியை செல்லும்போது பாவித் அவரை பின்தொடர்ந்து ஒரு தலையாக காதலித்துள்ளார். அதன்பிறகு சமீபத்தில் பாவித் தனது காதலை ஆசிரியையிடம் வெளிப்படுத்தி உள்ளார். அதனை ஆசிரியை ஏற்கவில்லை. தனக்கு காதலில் நம்பிக்கையில்லை. காதலிக்க விருப்பம் இல்லை என்று புறக்கணித்துள்ளார். ஆனாலும், பாவித் விடவில்லை.
பாவித் தொடர்ந்து ஆசிரியையை பின்தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் ஆசிரியை அவரை கண்டுக்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த பாவித் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஆசிரியையை வழிமறித்துள்ளார். தனது காதலை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார். அந்த காதலை ஆசிரியை ஏற்க மறுத்து சென்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த பாவித், ஆசிரியையை தாக்கி உள்ளார். மேலும் அவரது ஆடையை அவிழ்த்து மரத்தில் கட்டி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்த நிலையில் பாவித் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். இதையடுத்து ஆசிரியையை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர்.
இருப்பினும் பாவித் நடத்திய தாக்குதலில் காயமடைந்திருந்தார். இதையடுத்து அவர் சிவமொக்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது அவர் நலமாக உள்ளார். மேலும் ஆசிரியை அளித்த புகாரின் பேரில் ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருதலை காதலன் பாவித்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
