அடுக்குமாடி குடியிருப்பின் மாடியை ஆக்கிரமிப்பு செய்து ரூப் ஷீட் அமைத்த விசிக பிரமுகரை தட்டிக் கேட்ட கட்டுமான உரிமையாளரை தாக்கியவர் கைது.!

சென்னை

அடுக்குமாடி குடியிருப்பின் மாடியை ஆக்கிரமிப்பு செய்து ரூப் ஷீட் அமைத்த விசிக பிரமுகரை தட்டிக் கேட்ட கட்டுமான உரிமையாளரை தாக்கியவர் கைது.!

பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியை ஆக்கிரமிப்பு செய்து ரூப் ஷீட் அமைத்த விசிக பிரமுகரை தட்டிக் கேட்ட கட்டுமான உரிமையாளரை தாக்கி தலைமறைவான விசிக பிரமுகர் கைது, 

இதுவரை மொத்தன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த நிலையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பள்ளிகரணை, காமகோட்டி நகரில் கீர்த்தி முருகாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதை கமலஹாசன் என்ற கட்டுமான உரிமையாளர் கட்டியுள்ளார். இதில் முதல் தளத்தில் கமலஹாசன் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். இரண்டாவது தளத்தில் 3 வீடுகள் உள்ளது. அதில் S2 வீட்டை ரம்யா சுதர்சன் இவரிடமிருந்து வாங்கியுள்ளார். 

அந்த வீட்டில் விசிக பிரமுகர் செல்வகுமார் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். மற்ற வீடுகளை கட்டுமான உரிமையாளர் விற்பனை செய்ய முயன்றுள்ளார். அதற்கு விசிக பிரமுகர் விற்பனை செய்ய விடாமல் இடையூறு செய்து தனக்கு வாடகைக்கு கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். 

மேலும் மாடியில் தனது நண்பர்களோடு அமர்ந்து தினந்தோறும் மது அருந்தி தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

வீட்டை விற்பனை செய்ய விடாமல் நாயை விட்டு வீடு பார்க்க வருபவர்களை அச்சுறுத்தியதாகவும், மேலும் மாடியில் ரூப் ஷெட் அமைத்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடி அனைவருக்கும் பொதுவானது என கூறியுள்ளார் கட்டுமான உரிமையாளர் கமலஹாசன், அதற்கு நான் அப்படி தான் கட்டுவேன் நீ உன்னால் முடிந்ததை பார் என  மிரட்டியுள்ளார். 

கடந்த 1ம் தேதி கமலஹாசன் அவரது ஊழியரை மேலே சென்று போட்டோ எடுத்துவர சொல்லியுள்ளார் அவரும் சென்று போட்டோ எடுத்த போது அவரை தாக்கி அடித்து, கீழே அலுவலகம் அழைத்து வந்த விசிக பிரமுகர் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து கமலஹாசனை ஆபாசமாக திட்டி, தாக்கி பல்லை உடைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். 

காயமடைந்தவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பள்ளிகரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான விசிக பிரமுகர் உள்ளிட்ட 7 பேரை தேடி வந்தனர். 

இதில் தொடர்புடைய தமிழரசன்(28),
சுதாகர்(37), ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். 

முக்கிய பிரமுகரான விசிகவை சேர்ந்த செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று விசிக பிரமுகர் செல்வகுமார்(36), அவரது கூட்டாளிகள் பரத்(27), கோவிந்தராஜ்(39), ஜெபர்சன்(42),
ராகேஷ்(38), உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களை பள்ளிகரணை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.