கோவை மருதமலையில் சுவாமி தரிசனம் செய்த திரிஷா
கோவை

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா கிருஷ்ணன் கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்து வருகிறார் நடிகை திரிஷா. இயக்குநர் அமீரின் இயக்கத்தில் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தின் மூலம்தான் திரிஷா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
தற்போது, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார். சூர்யாவின் 45 ஆவது படமான இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் சூட்டிங் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, பிஎஸ்ஜி கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நடிகை திரிஷா தனது 22 ஆண்டுகால சினிமா பயணத்தை தனது சூட்டிங் ஸ்பாட்டில் சக சினிமா ஊழியர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார். அதைத்தொடர்ந்து, கோவையில் பிரசித்தி பெற்ற திருத்தலமான மருதமலை முருகன் கோயிலிலும் திரிஷா சுவாமி தரிசனம் செய்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று கோவை மருதமலை முருகர் கோவிலில் திரிஷா சாமி தரிசனம் செய்தார். கோவில் மூலஸ்தானத்தில் தரையில் அமர்ந்து அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது.