ரூ.30 ஆயிரம் லஞ்சம் கடையம் - காவல் ஆய்வாளர் கைது.!
தென்காசி

ரூ.30 ஆயிரம் லஞ்சம் கடையம் - காவல் ஆய்வாளர் கைது.!
தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக கையெழுத்திட்டு வந்த பணங்குடியை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் வழக்கை விரைவாக முடித்து கடத்தலுக்கு பயன் படுத்திய வாகனத்தை விடுவிப்பதற்காக ரூபாய் 30,000 லஞ்சம் வாங்கியபோது தென்காசி மாவட்டம் கடையம் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதாவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்
AGM கணேஷன்