மனைவியின் தங்கையை ஏமாற்றி கர்ப்பமாக்கிய மச்சானுக்கு 10 ஆண்டு சிறை .!
தென்காசி

மனைவியின் தங்கையை ஏமாற்றி கர்ப்பமாக்கிய மச்சானுக்கு 10 ஆண்டு சிறை
தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு
தென்காசி ஆக. 14
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே மனைவியின் தங்கையுடன் தகாத உடல் உறவு கொண்டு கர்ப்பம் ஆக்கிய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு கூறினார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள தலைவன் கோட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை அவரது சகோதரியின் கணவர் உதய குமார் என்பவர் ஏமாற்றி கடந்த 2018 ஆம் ஆண்டு கற்பழித்துள்ளார்.
இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக அவரை உதயகுமார் மிரட்டி உள்ளார்.இது குறித்து புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் செய்து. அதன் பேரில் புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு வழக்கை விசாரணை செய்து உதயகுமாருக்கு ( வயது 45) 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 2,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர்
குட்டி (எ) மருதப்பன் ஆஜரானார்.
செய்தியாளர்
AGM கணேசன்