பழையப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி

பழையப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்.!

பழையப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்டத் தலைவர் கவியரசு குற்றச்சாட்டு.

கிருஷ்ணகிரி நகரம்,  பழையபேட்டை, அங்காளம்மன் கோயில் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் நகர சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா பொறுப்பாளர் கோகுல் தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.கவியரசு, பாஜக நகர தலைவி விமலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தின் போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் மற்றும் கிரானைட் கொள்ளை அதிகளவில் நடைபெறுவதாகவும், அதை தடுக்க இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாகவும், இந்த நிலை மாற அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் எடப்பாடி அவர்களின் தேர்தல் அறிக்கையை விளக்கமாக எடுத்துரைத்தார். 

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறிதிகளை மக்களிடம் 
எடுத்துகூறி வாக்கு சேகரித்தாலே எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தில் முதல்வராக பதவி ஏற்பார். ஆகையால் நீங்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றிப்பெறச் செய்ய வேண்டும் என்று தெருமுனை பிரச்சாரக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

மேலும் இந்த கூட்டத்தில் நகர சக்தி கேந்திர பொறுப்பாளர் லோகேஷ்குமார், சக்திவேல், சட்டமன்ற சக்தி கேந்திர பொறுப்பாளர் கார்த்திகேயன், மற்றும் வேணு, செல்வம், அறிவுலகமேதை, சோசியல் மீடியா மணிகண்டன் உள்ளிட்ட பாஜக மாநில, மாவட்ட, நகர, மண்டல் நிர்வாகிகள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ