மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., வன உரிமை குழுவினர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், நரிகம் ஊராட்சி, கரியசந்திரம் கிராமத்தில் பழங்குடியினர் நலத்துறை சார்பாக வனத்துறை உரிமைச் சட்டம் 2006, கிராம சபைகளை வலிமைப் படுத்துவதற்கான பயிற்சி முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., வன உரிமை குழுவினர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி கவிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவகுமார், மாநில தலைமை பயிற்றுனர் ராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
