மேலப்பாவூர் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினின் நேரலை நிகழ்ச்சி.!
தென்காசி

மேலப்பாவூர் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினின் நேரலை நிகழ்ச்சி
ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
தென்காசி அக் 11
தென்காசி மாவட்டம், மேலப்பாவூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மேலப்பாவூர் இ.சேவை மையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சொள்ள முத்து மருதையா தலைமையில் நடைபெற்றது.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரலை நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் சொள்ள முத்து மருதையா பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் கண்டு களித்தனர். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், பிற துறை அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்