மேலகரம் பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா.!
தென்காசி

மேலகரம் பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா
தென்காசி செப் 15
தென்காசி மாவட்டம், மேலகரம் பேருந்து நிறுத்தம் அருகில் மேலகரம் பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின்
117 வது பிறந்தநாள் விழா மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூர் கழக செயலாளர் சுடலை தலைமை வகித்து அலங்கரிக்கப்பட்ட அன்னாரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். வாக்கு சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் வைத்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்கிற உறுதிமொழி எடுக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சலீம், ரமேஷ்குமார், ராமலட்சுமி, அறங்காவலர் குழு வீரபாண்டியன், நன்னை பாலு, யாகவா சுந்தர் கவுன்சிலர்கள் கபிலன், சுந்தரம் என்ற சேகர், சிங்கத்துரை, வார்டு செயலாளர்கள் காசி விஸ்வநாதன், குடியிருப்பு கணேசன், பகவதி ராஜ், குத்தாலிங்கம், பாலசுப்பிரமணியன், குருசாமி, பட்ட முத்து, மணி என்ற ஈஸ்வரன் சிங்கத்துரை, கல்யாண சுந்தரம், கணேசன், நன்னை சுந்தர், ஆயிரப்பேரி முத்துவேல், கபீர் ஷெரீப், குமாரவேல், சந்திரன், மீனாட்சி சுந்தரம், ஆத்தியப்பன், சு.சந்திரன், காளிராஜ், விக்னேஷ், கதிர் குமார், யாகவா அருண், தேவதாஸ், ஆறுமுகசாமி, வெங்கடாசலம், தீபா மாரியம்மாள், பிரேமா, முப்புடாதி, தர்மராஜ், குற்றாலம் குத்தாலிங்கம், ஆறுமுகம், பரமசிவன், சரஸ்வதி அம்மாள், தங்கம்மாள், லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்