தென்காசி 13 வது வார்டு நகராட்சி பள்ளியில் முன்னாள் மாணவருக்கு பாராட்டு விழா .!

தென்காசி

தென்காசி 13 வது வார்டு நகராட்சி பள்ளியில் முன்னாள் மாணவருக்கு பாராட்டு விழா .!

தென்காசி 13 வது வார்டு நகராட்சி பள்ளியில் முன்னாள் மாணவருக்கு பாராட்டு விழா .!

தென்காசி ஆகஸ்ட் 13

 தென்காசி 13 வது வார்டு நகராட்சி நடுநிலைப்
பள்ளியில் பயின்ற ஹர்சன் என்ற மாணவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில்
எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. அவருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.இந்
நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ஜபருல்லா கான்
வரவேற்புரை ஆற்றினார்.

ஆசிரியர் வின்சென்ட் பேசும் போது இவர் நம் முன்னாள் மாணவர்களில் இரண்டாவது மருத்துவர் ஆவார். இவரைப் போன்று கல்வி கற்று அரசு அதிகாரிகளாக நம் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.ஆசிரியர் கௌசல்யா கூறும் போது மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஆசிரியர் தமிழ்ச் செல்வி பேசும் போது நம் பள்ளி மாணவர்களுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.ஆசிரியர்  மணிமந்திரி பேசும் போது படிக்கும் போதே இவர் சாதனை படைப்பார் என்பது தெரியும் என நினைவு கூறினார்.

முடிவில் ஆசிரியர் விமலா நன்றி கூறினார்.
ஹர்சனுக்கு ஸ்டெதஸ்கோப் பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் ஹர்சனின் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, யாஸ்மின், புன்னகை சுகி மற்றும் ராதா ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்