இலஞ்சியில் அறிவியல் இயக்கம் சார்பில் தென் மண்டல அளவிலான ஒரு நாள் பயிற்சி .!
தென்காசி
இலஞ்சியில் அறிவியல் இயக்கம் சார்பில் தென் மண்டல அளவிலான ஒரு நாள் பயிற்சி
மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி
தென்காசி ஆக 30
வானில் தோன்றும் பிளட் மூன்!
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்காக இலஞ்சி தனியார் கல்லூரியில் நடைபெற்ற தெற்கு மண்டல பயிற்சி முகாமில் சந்திரனின் நிழல் விளையாட்டு நிகழ்வை வானியல் திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளதாக மாநில செயலாளர் எஸ். டி பாலகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அவர் அளித்த பேட்டியில்,
வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 9.57மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பித்து செப்டம்பர் 8-ம் தேதி விடியர்காலை 1.26 மணி வரை முழு கிரகணம் நடை பெறுகிறது.
பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, பூமியின் நிழலில் சந்திரன் மறைந்து அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும். இது "ப்ளட் மூன்" என்றும் அழைக்கப்படுகிறது.
வானில் நடைபெறும் இந்த அதிசயத்தை காண தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் உள்ள கல்லூரியில் வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தெற்கு மண்டல பயிற்சி முகாம் நடைபெற்றது. மேலும் தென்காசி மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 இடங்களில் இதனை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இந்த சந்திர கிரகணத்தை மக்கள் அனைவரும் சாதாரண கண்களால் பார்க்கலாம் எந்த வித அச்சமும் தேவையில்லை, கருவுற்ற பெண்கள் பார்க்கலாம்,
எப்போதும் போல அன்றாட வாழ்வில் ஈடுபடலாம் எந்தவித வதந்திகளையும் நம்ப வேண்டாம். இது வானில் நடைபெறும் நிழல் விளையாட்டு எனவும் அந்த வகையில் இது வானியல் திருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும் எனவும் பயிற்சி முகாமில் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் பணி நிறைவு கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் சுப்பையா பாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி, கருத்தாளர் சுந்தர்ராமன், மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், தலைவர் மதியழகன், டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜா குமார், ரம்யா, ஐயப்பன், ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
