த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாள் விழா .!
தென்காசி

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாள் விழா
தென்காசி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ் வழங்கினார்
தென்காசி ஜுன் 23
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுச் செயலாளர் ஆனந்தின் வழிகாட்டுதலில் தென்காசி தொகுதி முழுவதும் தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ஜே ஏ எஸ் ராஜ பிரகாஷ் ஏற்பாட்டில் தென்காசி சட்டமன்ற தொகுதி முழுவதும் செய்யப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளின் ஒரு பகுதியாக தென்காசி அரசு மருத்துவ மனையில் விஜய் பிறந்த தினமான நேற்று பிறந்த ஏழு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக அளித்தார்.
மேலும் தென்காசி அரசு மருத்துவமனை புல்லுக்காட்டு வலசை அருந்ததியர் புரம் மேலகரம் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கினார். குற்றாலத்தில் உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இரவில் தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ் இரவு விருந்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தென்காசி மத்திய மாவட்ட இணைச் செயலாளர் சிவா, பொருளாளர் மாரியப்பன், துணைச்செயலாளர்கள் அபூபக்கர் சித்திக், உமா, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, மரகதவல்லி, இசக்கியம்மாள், ராபின் ஹெய்ன்ஸ் சாம், ரஹ்மத்துல்லா, அரபாத் மாரீஸ்வரன் அப்துல் ரசாக் மரிய கனகராஜ் சரவணன் முகமது கான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்