எவர் கிரீன் அரிமா சங்கம் மற்றும் கிரீன் எர்த் ரெசெர்ச் ஃபவுண்டேஷன் இணைந்து பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்.!
சென்னை

அரிமா சங்கம், கிரீன் எர்த் ரிசர்ச் ஃபவுண்டேசன் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி அன்னதானம் போடப்பட்டது.
சென்னை கிண்டி மடுவின்கரை மாநகராட்சி பள்ளி வளாகத்தில், சென்னை எவர் கிரீன் அரிமா சங்கம் மற்றும் கிரீன் எர்த் ரெசெர்ச் ஃபவுண்டேஷன் இணைந்து சென்னை மாநகராட்சி 172 வது வார்டு தூய்மை பணியாளர்களுக்கு தமிழர் திருநாள் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக 13வது மண்டல குழுத் தலைவர் இரா.துரைராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் அரிமா ஸ்டீல்.டி.கர்ணா, தரமணி கண்ணன், நேருநகர் சதீஷ் குமார், அரிமா ஜெ.பிரடிபால், அரிமா சுரேஷ் குமார், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் தினகரன், அரிமா சங்க தலைவர் இளங்கோவன், செயலாளர் வேலவன் சுப்பிரமணியன், அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி, அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
செய்தியாளர்
S S K