மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ்கனி எம்.பி.மாவட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை.!

மதுரை

மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ்கனி எம்.பி.மாவட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை.!

மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக இன்று நேரில் சென்று கள ஆய்வு செய்தார் நவாஸ்கனி எம்.பி.

மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பிரச்சனையின்றி சுமுகமாக கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதேபோல நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் உள்ளார்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் பேசியிருப்பதாகவும் நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அங்கு தர்காவும், காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகிறார்கள்.
எனவே தேவையற்ற அசோகரிகத்தை அங்கு வரும் மக்களுக்கு ஏற்படுத்தாமல் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நவாஸ்கனி.

இது தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் பேசிய போது உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை ஆடு கோழி எடுத்து செல்வதற்கு இருக்கக்கூடிய தடை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும் விளக்கினார்.

சமைத்த அசைவ உணவை எடுத்துச் செல்ல தடை இல்லை என காவல் ஆணையர் கூறியதையடுத்து சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று மக்கள் உண்டனர். 

விரைவில் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு கடந்த காலங்களில் இருந்தது போன்று மக்கள் சிரமம் இன்றி தர்காவிற்கு சென்று வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கூறியுள்ளார்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )