திருப்பத்தூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர்.!
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர்.!
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 21.02.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்யப்படவுள்ளனர். கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு ஐடிஐ டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் படித்தவர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.
எனவே, தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது மேலும் விவரங்களுக்கு. திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணின் 04179-222033 வாயிலாக அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்திர வள்ளி.இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
ந.வெங்கடேசன்