ஆற்காடு அருகே SDPI கட்சியினர் மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் மசோதா சட்ட திருத்த நகலை சாலையில் எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!
ஆற்காடு

ஆற்காடு அருகே SDPI கட்சியினர் மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் மசோதா சட்ட திருத்த நகலை சாலையில் எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.!
மத்திய அரசின் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா 2024-ஐ திரும்ப பெற வலியுறுத்தி SDPI கட்சியின் சார்பில் நிர்வாகிகள் ஏராளமான தமிழக முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காந்தி சிலை அருகே அரசியலமைப்பு சட்டத்திருத்த வக்ஃப் சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென கூறி ஏராளமான கட்சி நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டனம் முழக்கங்களை வெளிப்படுத்தியதோடு மத்திய அரசு கொண்டு வந்த அந்த வக்ஃப் திருத்த சட்டத்தின் நகலை எரித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேருந்து நிலையத்தில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் எரிந்து கொண்டிருந்த நகலை தண்ணீரை ஊற்றி அணைத்தனர் மேலும் சில கட்சி நிர்வாகிகள் நகலை எரித்து கைகளில் பிடித்து கொண்டே கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்..
செய்தியாளர்
அருள் அரசன்
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )