மனிதநேய மக்கள் கட்சி மாவட்டம் மற்றும் நிர்வாக குழு கூட்டம்.!
மேட்டுப்பாளையம்

கோவை வடக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் & நிர்வாக குழு கூட்டம் மாவட்ட தலைவர் M. அப்துல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது .
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் R. முஹம்மது அப்பாஸ் , மாவட்ட பொருளாளர் S. அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட துணை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் .
சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில செயலாளர் கோவை சாகுல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.
மனிதநேய மக்கள் கட்சி 17 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்டம் முழுவதும் மமக கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடத்துவது எனவும் , பொது மருத்துவ முகாம்கள் , இரத்ததான முகாம்கள் நடத்துவது எனவும் ,முதியோர் இல்லங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்குதல் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
பிப்ரவரி 7 , 2025 முதல் பிப்ரவரி 28 , 2025 வரை தொடர் நிகழ்ச்சிகள் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது .
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் , துணை நிர்வாகிகள் , அணி நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi (MR)