தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி சார்பாக 5739 பேருக்கு மானியம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். !
தமிழகம்

தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி சார்பில் நடப்பாண்டில் (2025 ) 5739 நபர்களுக்கு ஹஜ் மானியம் தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சினை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் துவக்கிவைத்து முதற்க்கட்டமாக 10 பயனாளிகளுக்கு வழங்கினர்.
நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் S M நாசர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் ஹஜ் கமிட்டி தலைவருமான ப.அப்துல் சமத் MLA ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )