கெரிகேப்பள்ளி தொடக்கப்பள்ளியில் குழந்தைகளை கொண்டாடுவோம்' மாணவர் திறனறி திருவிழா.
கிருஷ்ணகிரி

கெரிகேப்பள்ளி தொடக்கப்பள்ளியில்... 'குழந்தைகளை கொண்டாடுவோம்' மாணவர் திறனறி திருவிழா.!
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளை கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் மாணவர் திறனறி திருவிழா ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், 2025 -26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. புதிதாக சேர்க்கப்பட்ட முதல் வகுப்பு மாணவர்கள் 10 பேருக்கு கல்வி உபகரண பொருட்களுடன் கூடிய ஸ்கூல் பேக் பரிசாக வழங்கப்பட்டது. இந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.
ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் முன்னணி வகித்த மாணவர்களுக்கும், 2024 - 25 கல்வி ஆண்டில் மாணவர்களின் நன்னடத்தை, வருகை சதவீதம், மகிழ்முற்றம் செயல்பாடுகள், கல்வித்தரம், சிலம்பம் அபாகஸ், ஓவியம், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு போட்டி போன்ற பல்வேறு திறன்களில் முன்னணி வைக்கும் மாணவர்களுக்கும், இந்து தமிழ் நாளிதழ் குழுமம் நடத்திய நற்சிந்தனை நன்னடை நிகழ்வில் சிறப்புடன் பெற்ற மாணவர்களுக்கும், மாவட்ட அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் மாறுவேட போட்டியில் இரண்டாம் இடமும் பரதநாட்டியத்தில் மூன்றாம் இடமும் பெற்றமைக்காகவும், சான்றிதழ்களும் ஷீல்டுகளும் பதக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கி பாராட்டப்பட்டது.
மாணவர்கள் பரதநாட்டியம் மற்றும் சிலம்பம் கலை மூலம் அனைவரையும் வரவேற்றனர். கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கு மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க கல்வி மாவட்ட கல்வி அலுவலர்(பொறுப்பு) சரவணன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். வட்டார கல்வி அலுவலர் திருமதி லோகநாயகி அவர்கள் தலைமை தாங்கினார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் அவர்கள், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம் அவர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் சிவகுமார் மற்றும் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊரின் முக்கிய பிரமுகர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் மாணவர்கள், அறம் விதை அறக்கட்டளை பொறுப்பாளர்கள், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள், தலைமையாசிரியர் பெருமக்கள், காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு பொறுப்பாளர்கள், துப்புரவு பணியாளர், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.
செய்தியாறர்
மாருதி மனோ