கந்திகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பைரவா திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி முதல் பிரதோஷம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பைரவா திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி முதல் பிரதோஷத்தை முன்னிட்டு
ஸ்படிக லிங்கத்திற்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் செல்லகுமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பைரவர் ஆலயத்தில் பங்குனி மாத முதல் பிரதோஷ வழிபாடு வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
பங்குனி பிரதோஷத்தினை முன்னிட்டு பைரவர் சுவாமி தலைமையில் திருக்கோவில் அமைத்துள்ள நந்தியின் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருக்கோவில் அமைந்துள்ள வெள்ளை கலரில் அமைந்துள்ள ஸ்படிக லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,
இந்த சிறப்பு பூஜையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் செல்லக்குமார் கலந்துகொண்டு உலக மக்கள் யாவரும் நலமுடன் வாழவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டி ஸ்படிக லிங்கத்திற்கு பால், தயிர், நெய், மஞ்சம், குங்கும், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு நறுமன திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்தும், அலங்கார தீபாராதனை காண்பித்து வழிபட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்படிக லிங்கத்தினை கிருஷ்ணகிரி மட்டுமின்றி பெங்களூர், வேலூர், ஆரணி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மேலும் இந்த சிறப்பு பூஜையின் போது பர்கூர் சட்ட மன்றத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், முன்னாள் மாவட்ட தலைவர் காசிலிங்கம், பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு, சேவதள மாவட்ட தலைவர் தேவராஜ், மாவட்ட செயலாளர் ஹரி, முன்னாள் எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில பொறுப்பாளர் ஆறுமுகம் சுப்பிரமணி, பாண்டுரங்கன்,
சக்திவேல், அயோத்தி, சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
