கிருஷ்ணகிரியில் புனித ரமலான் நோன்பு திருநாளினை முன்னிட்டு, அனைத்து பள்ளிவாசல்களிலும் லைலத்துல் கதிர் என்கிற பூந்தி திருவிழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் புனித ரமலான் நோன்பு திருநாளினை முன்னிட்டு, அனைத்து பள்ளிவாசல்களிலும் லைலத்துல் கதிர் என்கிற பூந்தி திருவிழா மற்றும் சிறப்புதொழுகை நடைபெற்றது, தொழுகை முடிந்தவுடன், அனைவருக்கும் பூந்தி பிரசாதமாக வழங்கப்பட்டது.
இஸ்லாமிய பெருமக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான புனித ரமலான் பண்டிகை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் களைகட்ட துவங்கியுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் இஸ்லாமிய பண்டிகைகளின் ஒன்றான ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைந்துள்ள மசூதிகள் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையில் உள்ள அக்ஸா மசூதி , கோட்டையில் உள்ள ஷாஹி மசூதி, பழைய பேட்டையில் உள்ள பூரா மசூதி உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில், ரமலான் நோன்பு லைலத்துல்கதர் என்கிற பூந்தி திருவிழா சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலத்துக் கொண்டு தொழுகையில் ஈடுப்பட்டனர். இந்த சிறப்பு தொழுகை முடிவில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பூந்தி பொட்டலங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
மேலும் இந்த விழாவில் கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையில் உள்ள மஸ்ஜித் - யே - அக்ஸா பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு திருநாளினை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு தொழுகையில் தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மற்றும்சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான டாக்டர் சந்திர மோகன் கலந்து கொண்டு இஸ்லாமிய மதகுருமாரை சந்தித்து பொன்னாடை அணிவித்து லைலத்துல்கதர் என்கிற பூந்தி திருநாள் வாழ்த்தினை அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தெரிவித்தார் அப்போது நகர்மன்ற உறுப்பினர் முகமதுத்ஜான் உள்ளிட்ட மஜித் கமிட்டி பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் இதே போல கிருஷ்ணகிரி, ஓசூர், காவேரிப்பட்டணம், பர்கூர், தளி, ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பள்ளி வாசல்களில் ரமலான் லைலத்துல்கதர் என்கிற பூந்தி திருவிழா மற்றும் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் பெரும் திரளாகக் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
