நீர்நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை.!

கிருஷ்ணகிரி

நீர்நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை.!

கிருஷ்ணகிரி அருகே நீர்நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகையை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார், இதில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில்
தென்மேற்கு  பருவமழையையொட்டி  கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி ஏரியில் நீர் நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வு போலி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

மாவட்ட தீயணைப்பு  துறை அலுவலர் வேலு தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்கள்  கலந்து கொண்டு பருவ மழை காலங்களில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகையை துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து நிலைய அலுவலர் அந்தோனிசாமி சிறப்பு அலுவலர்கள் பழனி, சீனிவாசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு செயல்விளக்கம் செய்து காட்டினார்கள்.

மேலும் நீர்நிலைகளில் சிக்கி தவிப்பவர்கள் மட்டுமின்றி இடுபாடுகளில் சிக்சி கொண்டவர்களையும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்பணித் துறையினர் படகு மற்றும் சிறப்பு உபகரணங்களை பயன்படுத்தி பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்புவது குறித்து  பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ