கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழா. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர இந்தியாவின்
79 ஆவது சுதந்திர தின விழா கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவின் போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் தேசியக் கொடியினை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கி அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்த சுதந்திர தின விழாவின் போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் ஜான்சி ராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி சண்முகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு திருமதி.ரெஜிலா, ஒன்றிய கணக்கர் நிர்மல் குமார் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த கொடி ஏற்றத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாருதி மனோ