பாரத ஸ்டேட் வங்கி எதிரில் ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம்.!
திருப்பத்தூர்
திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம்.!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஒப்படை வேண்டும், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவகணேசன், சுபாஷ் சந்தர், கார்த்திகேயன் தீ மூர்த்தி பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் ஞானசேகரன் சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ந.வெங்கடேசன்