ஏழை எளிய மக்களுக்கு நோன்பு நோற்க தேவையான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி .!
தமிழகம்

ஏழை எளிய மக்களுக்கு நோன்பு நோற்க தேவையான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
சென்னை ராயப்பேட்டை YMCA திடலில் புனித ரமலான் நோன்பை முன்னிட்டு தமிழ்நாடு வஃக்பு வாரியம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நோன்பு நோற்க தேவையான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாண்புமிகு வஃக்பு வாரிய தலைவர் ஜனாப் நவாஸ் கனி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆவடி S.M.நாசர், இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மமக பொது செயலாளர் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் ப.அப்துல் சமது MLA,
வக்ஃப் வாரிய முதன்மை செயலாளர், சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக இறையன்பன் குத்தூஸின் இனிய குரலில் மஃரிப் தொழுகைக்கான பாங்கோசையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )