தென்காசியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பூத் கமிட்டி மாநாடு.!
தென்காசி
தென்காசியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பூத் கமிட்டி மாநாடு
தென்காசி நவ 30
தென்காசி மாவட்ட, எஸ்டிபிஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு தென்காசி விடிஎஸ்ஆர் மகாலில் வைத்து நடை பெற்றது.

மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் திவான் ஒலி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபர் அலி உஸ்மானி, நெல்லை மண்டல தலைவர் சிக்கந்தர், மாவட்ட துணைத் தலைவர் முகமது நயினார், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் சேக் முகமது ஒலி, மாவட்ட செயலாளர்கள் சீனா, சேனா, சர்தார், அப்துல் பாசித், நூர்முகமது, பொருளாளர் யாசர்கான் எம் சி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஸ்கர் அலி, மகளிர் அணி மாவட்ட தலைவி பரக்கத் நிஷா, மாவட்ட செயலாளர் சுலைகாள்,வேளாண் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம், இணை ஒருங்கிணைப்பாளர் அன்சாரி, வர்த்தக அணி மாவட்ட தலைவர் முஹம்மது கனி, செயலாளர் தமீம் அன்சாரி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் ஹக்கீம், தென்காசி சட்டமன்றத் தொகுதி தலைவர் பீர் முகமது, தொகுதி செயலாளர் செய்யதுஅலி பாதுஷா, கடையநல்லூர் தொகுதி தலைவர் ஹக்கீம் சேட், செயலாளர் சாஜித் அலி, விஸ்வாகாஜா, அப்துல் அஜீஸ், முகமது நிசார், ஜமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், கரீம், அகமது நவவி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி மாநாட்டு பேருரை ஆற்றினார்.
மாநாட்டில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு விரோதமான விதைகள் சட்டம் 2025 வரைவு மசோதாவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப் பட்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
