இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நல்ல கண்ணு 100 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி.!!

ஆத்தூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நல்ல கண்ணு 100 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி.!!

ஆத்தூர்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) நூற்றாண்டு விழா துவக்க நாள் மற்றும் தோழர் நல்லகண்ணு நூறாம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் ஆத்தூர் ஒன்றிய தோழர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் இலக்கிய ராஜ், பேரூ கழகச் செயலாளர் முகமது மைதீன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் தோழர் நல்ல கண்ணுவின் நூறாவது பிறந்த தின விழா சித்தையன் கோட்டை பேருந்து நிலைய திடல் மற்றும் அழகர் நாயக்கன்பட்டி பேருந்து நிலைய திடலில் அனைத்து மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

விழாவில் முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு ராஜாமணி தலைமையில் சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டது..

இதில் அவர் கூறியதாவது...

கடந்த 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் பிறந்தவர் நல்ல கண்ணு.

பள்ளி மாணவனாக விளங்கிய போதே ஸ்ரீ வைகுண்டத்தில் நடைபெற்ற தேசிய தலைவர்கள் பேசிய பொதுக் கூட்டங்களுக்கு சென்று அவர்களின் உரையை கேட்டுள்ளார். அதனால் ஏற்பட்ட தாக்கத்தில் தானும் ஒரு தேசிய உணர்வாளராக உருவெடுத்தார்.

பள்ளி ஆசிரியர் ஒருவர் கொடுத்த கம்யூனிஸ்ட் நூல்களைப் படித்து சிந்தனைக்கு ஆட்பட்டார் நல்லகண்ணு.

திருநெல்வேலியில் இருக்கும் கல்லூரியில் என்டர் மீடியா படித்து முடித்து பட்ட வகுப்பை படித்து கொண்டிருக்கும் போது பொதுவாழ்வில் மூழ்கி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.

பின்னர் 1945 இல் மதுரையில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் ஜீவா ஆற்றிய உரையை கேட்டு ஊக்கம் பெற்றார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட தொடங்கினார்‌.

ஆதிக்கங்களுக்கு எதிராகவும் ,ஏழை எளியவர்களுக்கு ஆதரவாகவும், இளம் வயதிலேயே போராட்ட களம் கண்டார்.

சுதந்திரத்திற்கு பின்னர் கட்சி தடை செய்யப்பட்டதால் தலைமறைவு வாழ்க்கையை நடத்தினார்.          

1949 இல் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பல துன்ப துயரங்களுக்கு ஆளானார். மேலும் இளைஞனாக இருந்தபோது நல்ல கண்ணுவின் அடர்த்தியான மீசையில் சிகரெட் நெருப்பை வைத்து கொடுமைப்படுத்தி போலீஸ் இன்ஸ்பெக்டரால் சதி வழக்கில் சிக்க வைக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறை கொட்டடியில் அடைக்கப்பட்டார்.

1958 ல் அவரது கட்சி தோழர் அன்னச்சாமியின் மகளாகிய ரஞ்சிதம் அம்மையாரை திருமணம் செய்து கொண்டார் .

நீண்ட காலம் விவசாய தொழிலாளர் சங்கத் தலைவராக விளங்கிய நல்லக்கண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக 9 ஆண்டுகள் செயலாற்றினார்.

தியாகம், அர்ப்பணிப்பு, எளிமை ,நேர்மை ஆகிய நற்பண்புகளின் இலக்கணமாக திகழும் அரசியல் தலைவர் நல்லக்கண்ணு அவர்களுக்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாடுவது எம்மை போன்றவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது.

மேலும் பொதுவாழ்வில் குறியீடாக விளங்கும் நூற்றாண்டு நாயகர் நல்லகண்ணு அவர்களை வாழ்த்துவதை விட வணங்குவதே பொருத்தம் என கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் உடன் பாரூக், பசீர் முகமது, சாகுல் ஹமீது மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அழகர் சாமி