முதியவரை தாக்கிய டாஸ்மாக் ஊழியர்.!

குற்றம்

முதியவரை தாக்கிய டாஸ்மாக் ஊழியர்.!
பன்னீர்

அரசு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்க கூடுதலாக 5 ரூபாய் பணம் இல்லாததால் முதியவரை தாக்கிய விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை. 

ரத்தம் சொட்ட சொட்ட அடித்ததாக புகார். 

சென்னை வேளச்சேரி நேதாஜி ரோட்டில் டாஸ்மாக் கடை எண் 692ல் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது,

இந்த கடையில் நேற்று (21-12-2024) இரவு 8.20 மணியளவில் பன்னீர் என்ற முதியவர் மதுபாட்டில் வாங்க வந்துள்ளார்.

நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - டிஜிபி சங்கர் ஜிவால் இ.கா.ப. உத்தரவு - https://www.newstodaytamil.com/Armed-police-protection-in-courts---DGP-Shankar-Jiwal-IPS-order

அவர் எம்.ஆர்.பி.விலையையும் அதனுடன் சேர்த்து கூடுதலாக 5 ரூபாய் பணமும் கொடுத்துள்ளார். அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் ரமேஷ்பாபு கூடுதல் 5 ரூபாய் எங்கடா என கேட்டு திட்டி, வயதிற்கும் மரியாதை இல்லாமல் அந்த முதியவரின் சட்டையை பிடித்து இழுத்து வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே கடையில் பொருத்தி இருக்கும் கம்பி ஜன்னலில் முதியவரின் முகத்தை வேகமாக இடித்துள்ளார்.

இதில் கண்ணுக்கு அருகில் பலத்த காயமடைந்த முதியவர் பன்னீர் என்பவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 

டாஸ்மாக் கடை விற்பனையாளர் ரமேஷ் பாபு மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதே குற்றம், இதில் எம்.ஆர்.பியை விட 5 ரூபாய் கூடுதலாக கொடுத்த முதியவரிடம், இன்னும் கூடுதலாக 5 ரூபாய் எங்கடா என கேட்டு அடித்து கண்ணிற்கு அருகில் காயம் ஏற்படுத்திய விற்பனையாளர் மீது டாஸ்மாக் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட முதியவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலையில் மதுவிற்பனை செய்வதை தடுத்து நிறுத்திட வேண்டும் என மது பிரியர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

S S K