அதிமுக மகளிர் அணி சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளினை முன்னிட்டு மாபெரும் அன்னதானம்.!

கிருஷ்ணகிரி

அதிமுக மகளிர் அணி சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளினை முன்னிட்டு மாபெரும் அன்னதானம்.!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளினை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் வழங்கும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் துவக்கிவைத்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணித்தலைவி திருமதி சுகந்தி மாது அவர்களின் தலைமையில் தாளப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவின்போது அதிமுக கட்சியின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் 109 -வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான அசோக்குமார் கலந்துகொண்டு தாளப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் பணியினையும் துவக்கி வைத்தார்.

மேலும் இந்த விழாவின்போது முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர்களான முனி வெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜன், இளைஞர் அணி செயலாளர் மாதையன், அதிமுக கட்சியை சேர்ந்த நவாப், ஒன்றிய செயலாளர்களான  சோக்காடி ராஜன், கன்னியப்பன், பெருமாள், மாவட்ட இளைஞரணி ஒன்றிய செயலாளர் சின்னதம்பி அதிமுக தொழில் குழுமத்தின் தலைவர் சுப்பிரமணியன், 6-வது வார்டு வட்ட செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய அவை தலைவர் ரஞ்சன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ