தென்காசி புனித மிக்கேல் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள்.!
தென்காசி
தென்காசி புனித மிக்கேல் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள்
பழனிநாடார் எம்எல்ஏ,ஜெயபாலன் வழங்கினர்
தென்காசி டிச 11
தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான எஸ்.பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் தலைமை வகித்து பள்ளி மாணவிகளுக்கு 363 தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மரிய அருள் செல்வி வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர் மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமாகிய சாதிர், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் சண்முகவேல், மாவட்ட பொதுச் செயலாளர் ஏஜிஎம்.கணேசன், நகர பொருளாளர் ஈஸ்வரன், கவுன்சிலர் ரபீக், நரி சேட், பிரபாகரன், அரவிந்த், திமுக நகர பொருளாளர் சேக்பரீத், சாரதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
