கின்னஸில் இடம் பிடித்த காமெடி நடிகர்

கின்னஸில் இடம் பிடித்த காமெடி நடிகர்

ஐதரபாத் : தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அடுத்தடுத்து 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார் காமெடி நடிகர் பிரம்மானந்தம்.

கடந்த 1987ம் ஆண்டில் தெலுங்கில் தன்னுடைய முதல் படத்தில் நடிக்கத் துவங்கிய இவர், அடுத்தடுத்த படங்களில் திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லாமல் நடித்து வருகிறார்.

இவரது பாடி லாங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. 67 வயதாகும் பிரம்மானந்தம் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீசான குண்டூர் காரம் மிகச்சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இவரது சொத்து மதிப்பு ஏறக்குறைய 500 கோடிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 39 வருடங்களில் 1000 படங்களை முடித்த உலகின் ஒரே நடிகர் பிரம்மானந்தம் மட்டுமே என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிரம்மானந்தம் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தற்போது இந்த நிலையை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.