மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்திய திமுக.!

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம்

அண்ணா சாலை பேருந்து நிலையம் அருகே திமுக மாவட்ட பிரதிநிதி சிவா தலைமையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
இப் போராட்டத்தில் ஏஜிஆர் ரவி நகர துணைச் செயலாளர் முன்னிலை வகித்தார்
போராட்டத்தின் 

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க வேண்டும் எனவும் தமிழக எம்பிகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்து இருப்பதை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை கண்டன முழக்கங்களாக எழுப்பினர்

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

செய்தியாளர்

ஆர்ஜே. சுரேஷ்